Load Image
Advertisement

வடபழனி சாலைக்கு மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பெயர்

 Vadapalani Road is named Mandalin Srinivas    வடபழனி சாலைக்கு மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பெயர்
ADVERTISEMENT


வடபழனி,வடபழனி குமரன் காலனி பிரதான சாலை, மாண்டலின் ஸ்ரீனிவாஸ் முதன்மை சாலை என, பெயர் மாற்றப்பட்டது.

மாண்டலின் எனும் மேற்கத்திய வாத்தியத்தில் கர்னாடக இசை வாசித்து, இளம் வயதிலேயே உலக இசை மேடைகளில் சாதனை நிகழ்த்தியவர், இசை மேதை மறைந்த மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ்.

வளசரவாக்கம் மண்டலம், 130 வது வார்டு, வடபழனியில் குமரன் காலனி பிரதான சாலையில், மறைந்த மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ் இல்லம் அமைந்துள்ளது. அவர் நினைவாக, இச்சாலைக்கு, மாண்டலின் ஸ்ரீனிவாஸ் முதன்மை சாலை என பெயர் மாற்றப்பட்டு, பெயர்ப்பலகை வைக்கப்பட்டது.

இதனை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று திறந்து வைத்தார்.

இதில், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி மாண்டலின் ஸ்ரீனிவாசனின் தந்தை சத்திய நாராயணா, அவரது சகோதர் மாண்டலின் ராஜேஷ், பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், வீணை கலைஞர் ராஜேஷ் வைத்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement