பாசன கிணற்றுக்கு இழப்பீடு சிப்காட் அலுவலகம் முற்றுகை
திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கே.பெரியபட்டி பிரிவு அருகே, சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. இதற்காக, 2012ல் கண்ணுடையான்பட்டி, கே.பெரியபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியில், 1097 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
விவசாய நிலம், வீடுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், 52 பாசனக்கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இழப்பீடு வழங்கவில்லை.
உடனடியாக இழப்பீடு வழங்கவும், அதுவரை விவசாயம் செய்ய அனுமதிக்கவும் கோரி, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், நேற்று சிப்காட் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சிப்காட் திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, விவசாயிகள் கலைந்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!