ADVERTISEMENT
சென்னை, பிரதமர் மோடியின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு, 198வது வார்டு கவுன்சிலரும், பா.ஜ.,வின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவருமான லியோ சுந்தரம் ஏற்பாட்டில், 6,023 பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.
ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம், லட்சுமி விநாயகர் ஆலயத்தில், நேற்று முன்தினம் நிகழ்ச்சி நடந்தது.
இதில், பா.ஜ., மாநில துணை தலைவர் நாகராஜன் பேசியதாவது:
மத்திய அரசு சார்பில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. 'காஸ்' சிலிண்டர் விலை குறைப்பால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லியோ சுந்தரம், தன்னலம் மட்டுமே கருதாமல், தொடர்ச்சியாக கல்வி உதவித்தொகை, கோவில்கள் மேம்பாடு, ஏழைகளுக்கு உதவி செய்வதை நினைத்து பெருமை கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாநில செயலர் சூர்யா, மாவட்ட தலைவர் சாய் சத்யன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!