பஸ்களிடையே போட்டி; பயணிகள் கடும் அவதி
பல்லடம்:தனியார் பஸ்களிடையே ஏற்பட்ட போட்டா போட்டி காரணமாக,வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கோவை -- தாராபுரம் செல்லும் தனியார் பஸ் (டிஎன்.42.க்யூ.3070) மற்றும் கோவை -- திருப்பூர் செல்லும் தனியார் பஸ் (டிஎன்.42.எஸ்.5995) இரண்டும், நேற்று மாலை சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டன.
புறப்பட்டதில் இருந்தே இரண்டு பஸ்களுக்கும் இடையே ஏற்பட்ட போட்டியால், வழியெங்கும் அதிவேகத்தில் பஸ்களை இயக்கி உள்ளனர். லட்சுமி மில்ஸ் பகுதியில், இரு பஸ்களின் நடத்துனர், ஓட்டுனர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்பின், பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் முன் நிறுத்தப்பட்ட நிலையில், இரு தரப்புக்கு இடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படாததால், நாளை (இன்று) புகார் அளிக்க வருமாறு கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.
பயணிகள் கூறியதாவது:
சிங்காநல்லுாரில் இருந்தே இரண்டு பஸ்களும் அதிவேகத்தில் ஓட்டி வந்தனர். பயணிகள் பாதுகாப்பு குறித்து டிரைவர்களுக்கு அக்கறை இல்லை. இவ்வாறுபயணிகளை ஏற்றுவதில் ஏற்படும் போட்டி காரணமாக, அடிக்கடி விபத்து, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதுபோல், சில நாட்களுக்கு முன், பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகில், தனியார் பஸ் மோதியதில் ஒருவர் இறந்தார். எனவே, பயணிகளின் உயிருக்கு உலை வைக்கும் தனியார் பஸ்களின் போட்டி மனப்பான்மையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!