குட்கா மொத்த வியாபாரி கணக்கை முடக்க பரிந்துரை
திருவெறும்பூர்:திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி பகுதியில், எஸ்.பி., தனிப்படை போலீசார் சோதனை நடத்தியதில், சோழமாதேவி அசரப்அலி, 49, வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 182 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.
விசாரணையில், தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே, பசுபதி கோவில் விக்னேஸ்வரன், 33, என்பவரிடம் வாங்கியதாக கூறியுள்ளார். இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் இரண்டு பைக்குகள், மொபைல் போன்கள், 28,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதில், விக்னேஸ்வரன் வங்கி கணக்கில், லட்சக்கணக்கில் பணம் பரிமாற்றம் நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரது வங்கி கணக்கை முடக்க, திருச்சி எஸ்.பி., வருண்குமார் பரிந்துரை செய்துள்ளார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!