ADVERTISEMENT
காஞ்சிபுரம் அருகே, வாலாஜாபாத் அடுத்த, தொள்ளாழி கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவருக்கு சொந்தமான கறவை மாடுகளை, நேற்று மதியம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.
அப்போது, வயல்வெளியில் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தில், நான்கு கறவை மாடுகளும், ஒரே நேரத்தில் பலியாகின. இதேபோல, தம்மனுார் கிராமம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த வேதாச்சலம் என்பவர், தனக்கு சொந்தமான 10 மாடுகளை நேற்று காலை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.
பூதேரி கரை மீது செல்லும் போது, அறுந்து கிடந்த மின்கம்பியை ஒரு சினை மாடு மிதித்ததில், சம்பவ இடத்திலேயே இறந்தது. அதிர்ஷ்டவசமாக பிற மாடுகள் உயிர் தப்பின.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!