மனைப்பிரிவு விண்ணப்பம் சி.எம்.டி.ஏ., புதிய கட்டுப்பாடு
சென்னை, 'புதிய மனைப்பிரிவுகளுக்கு ஒப்புதல் கோரும் விண்ணப்பங்கள், வரைபடங்களை ஆன்லைன் முறையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும்' என, சி.எம்.டி.ஏ., உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெருநகரில் மனைப்பிரிவுகள், அடுக்குமாடி திட்டங்களுக்கு சி.எம்.டி.ஏ., ஒப்புதல் வழங்குகிறது. இது தொடர்பான பணிகள் படிப்படியாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
கட்டுமான திட்டங்களை தொடர்ந்து, புதிய மனைப்பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் பணிகளையும் முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, புதிய மனைப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள், ஆவணங்கள், வரைபடங்கள் அனைத்தையும் ஆன்லைன் முறையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என, சி.எம்.டி.ஏ., உத்தரவிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், மேம்பாட்டாளர்கள், கட்டடகலை வல்லுனர்கள் ஆகியோர் புதிய நடைமுறையை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!