மகளிர் உரிமை தொகை சேவை மையம் துவக்கம்
சென்னை, சென்னையில், மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்களுக்கு உதவும் வகையில், மண்டல அலுவலகங்களில் சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1.6 கோடி மகளிருக்கு, தலா 1,000 ரூபாய் உரிமை தொகையை அரசு வழங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்டவர்கள், மீண்டும் மேல்முறையீடு செய்யும் வகையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மற்றும் 15 மண்டல அலுவலகங்களிலும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பிற மாவட்டங்களில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது, ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் வங்கி கணக்குகளுக்கு உரிமை தொகை வராமல் இருப்பது உள்ளிட்ட சந்தேகங்கள், குறைகள் இருந்தாலும் உதவி மையத்தை அணுகி தீர்வு காணலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட பின், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!