கேரட் விலை கிலோ ரூ.15
சென்னை:சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஊட்டி, கொடைக்கானல், தேனி உள்ளிட்ட பல இடங்களில் இருந்து கேரட் வரத்து உள்ளது. கர்நாடகாவில் இருந்தும் விற்பனைக்கு வருகிறது.
தமிழக கேரட், துருவுவதற்கும், கடிப்பதற்கும் எளிதாக இருக்கும்; சாறு அதிகம் கிடைக்கும். கர்நாடகா கேரட், கடினமாக இருக்கும்; சாறு குறைவாக இருக்கும். இதனால், பலரும் தமிழக கேரட்களையே விரும்புவர்.
ஆனால், ஓட்டல்கள், 'பாஸ்ட்புட்' கடைகள் உள்ளிட்ட வர்த்தக தேவைக்கு, கர்நாடகா கேரட் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது, தமிழக கேரட் கிலோ, 25 - 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடகாவில் சீசன் களை கட்டுவதால், கேரட் வரத்து அதிகரித்துள்ளது. தினமும், 10க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரட் வரத்து உள்ளது.
இதனால், கர்நாடகா கேரட் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விற்பனையாகாமல், தேங்கும் நிலை ஏற்பட்டால், கிலோ, 10 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!