பெண் கொடூர கொலை :சந்தேக நபரிடம் விசாரணை
அவிநாசி;அவிநாசியில், பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தேகத்துக்கு இடமான ஒருவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அவிநாசி - மங்கலம் பைபாஸ் ரோட்டில், நேற்று முன்தினம், 35 வயதுடைய பெண் ஒருவரின் தலையில் கல்லை போட்டு, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். அவிநாசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அருகிலிருந்த கடைகளின் 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அவ்வகையில், பழங்கரை பைபாஸ் பகுதியில் சுற்றித்திரிந்த, 21 வயதுடைய ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், ''சிசிடிவி காட்சிகளில் உள்ள மர்ம நபரின் உடல் அமைப்புடன் தற்போது பிடிபட்டுள்ள, 21 வயதுடைய வாலிபரின் உடல் அமைப்பும் ஒன்று போலவே உள்ளது. அவர், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வருவதால் சந்தேகத்தின் பேரில் தீவிரமாக விசாரணைசெய்து வருகிறோம்,'' என்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!