ADVERTISEMENT
சென்னை, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், சென்னையில் நடந்து வருகின்றன.
இதில் கிளப், அகாடமி, நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமான அணிகள், பல்வேறு டிவிஷனில் பங்கேற்று மோதி வருகின்றன.
இதில், நான்காவது டிவிஷன் 'சி' மண்டல ஆட்டத்தின், 25 ஓவர்கள் கொண்ட போட்டியில், மின்வாரிய விளையாட்டு கமிட்டி அணி மற்றும் ராயப்பேட்டை சி.சி., அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த மின்வாரிய விளையாட்டு கமிட்டி அணி, 23 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 77 ரன்கள் சேர்த்தது. எதிர் அணி வீரர் சந்துரு, 18 ரன்கள் விட்டுக் கொடுத்து, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து பேட் செய்த ராயப்பேட்டை சி.சி., அணி, 19 ஓவர்களில், நான்கு விக்கெட் மட்டும் இழந்து, 78 ரன்களை அடித்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐந்தாவது டிவிஷன், 'டி' மண்டலத்தின், 50 ஓவருக்கான போட்டி நடந்தது. காந்திநகர் சி.சி., அணி, விஜய்ஸ் கிளப் அணிகள் மோதின.
அதில் முதலில் பேட் செய்த காந்தி நகர் சி.சி., அணி, 30 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 78 ரன்கள் அடித்தது. எதிர் அணி வீரர் அபிஷேக், 20 ரன்கள் விட்டுக் கொடுத்து, ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து பேட் செய்த விஜய்ஸ் கிளப் அணி, 18.1 ஓவர்களில், 65 ரன்களுக்கு 'ஆல் ஆவுட்' ஆகி, தோல்வியை தழுவியது.
காந்தி நகர் சி.சி., அணி வீரர் சர்ச்சில், 22 ரன்கள் விட்டுக் கொடுத்து, ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!