பெண்ணிடம் செயின் பறிப்பு: மர்ம ஆசாமிகள் கைவரிசை
அவிநாசி;அவிநாசியில், நடந்து சென்ற பெண்ணிடம், மர்ம ஆசாமிகள், செயின் பறித்து தப்பினர்.
அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் வசிப்பவர் அகிலா, 50. நேற்று, மாலை அவிநாசியில்உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது தாமரைக்குளம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே, 'பல்சர்' பைக்கில், வழி கேட்பது போல் அருகில் வந்து இருவர், திடீரென அகிலாவின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் நகையை பறித்து, தப்பி சென்றனர்.
இதனை பார்த்து, டூவீலரில் வந்த மற்றொரு நபர் அவர்களை பிடிப்பதற்காக துரத்திச் சென்றுள்ளார். ஆனால் மர்ம நபர்கள் அசுர வேகத்தில் சென்றதால், முடியவில்லை.
அவிநாசி போலீசாரிடம் அகிலா அளித்த புகாரின்பேரில், போலீசார், விசாரித்து வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!