Load Image
Advertisement

சர்வதேச கிக் பாக்சிங் போட்டிக்கான பயிற்சி முகாம் ஹிமாச்சலில் துவக்கம்

சென்னை, செப். 20--

'வாக்கோ இந்தியா' சார்பில், சப் - ஜூனியர் மற்றும் ஜூனியருக்கான தேசிய போட்டிகள், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சமீபத்தில் நடந்தன.இதில், குழந்தைகள், கேட்டஸ் மற்றும் ஜூனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழக அணி, குழந்தைகள் மற்றும் கேட்டஸ் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தில், இரண்டாம் இடத்தையும், ஜூனியர் பிரிவில் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடத்தை கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து, தேசிய போட்டியில் தேர்வான வீரர் - வீராங்கனையர், சர்வதேச போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று உள்ளனர். அவர்களுக்கான சர்வதேச பயிற்சி முகாம், ஹிமாச்சல பிரதேசம், சிம்லாவில் நேற்று துவங்கியது.

சர்வதேச கிக் பாக்சிங் போட்டிக்கு தேர்வான, நாடு முழுதும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், ஆறு வீராங்கனையர் உட்பட 41 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதுகுறித்து, மாநில சங்கத்தின் பொதுச்செயலர், வாக்கோ இந்தியா தலைமை பயிற்சியாளர் சுரேஷ் கூறுகையில், ''சர்வதேச பயிற்சி முகாமில், 41 கிக்பாக்சர்கள் பங்கேற்றுள்ளனர். அதில், 10 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

இங்கு, வீரர்களுக்கு பயிற்சி மட்டுமின்றி, நடுவர்களுக்கும் முதலுதவி, மறுவாழ்வு உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படுகிறது,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement