கள் இறக்குவது குறித்த கருத்து உ.உ.க., செல்லமுத்து வருத்தம்
பல்லடம்:'கள்' இறக்குவது தொடர்பாக, உ.உ.க., நிர்வாகி ஒருவரின் கருத்துக்கு, மாநில தலைவர் செல்லமுத்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தேங்காய்க்கு உரிய விலை கிடைப்பதுடன், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதுதான் உ.உ.க.,வின் எதிர்பார்ப்பு. இதற்கிடையே, மாநில செயலாளர் ஈஸ்வரன், பேச்சு வழக்கில் கூறிய செய்தி, 'கள்' இறக்க அனுமதிக்க கூடாது என, நாளிதழ் ஒன்றில் தவறாக பிரசுரமானது.
இந்த தவறான செய்தியால், விவசாய சங்கங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிட்டது. எனவே, வருத்தம் தெரிவிக்கிறேன். வரும் ஜன., 21ல் 'கள்' இறக்கும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறேன், என்றார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!