வக்கீல்கள் புறக்கணிப்பு
திருப்பூர்;திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதியின் நடவடிக்கையைக் கண்டித்து, கடந்த, 14ம் தேதி முதல் முதலாம் மற்றும் 2வது கூடுதல் மாவட்ட கோர்ட் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் புறக்கணிப்பது என வக்கீல்கள் முடிவு செய்தனர்.
இதில், திருப்பூர் பார் அசோசியேசன், அட்வகேட்ஸ் அசோசியேசன் மற்றும் மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த வக்கீல்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், புறக்கணிப்பு போராட்டம் அறிவித்த சங்க நிர்வாகிகளுக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா அனுப்பிய நோட்டீஸ் விவரம்:
திருப்பூர் முதலாவது மற்றும் 2வது கூடுதல் மாவட்ட கோர்ட்களை புறக்கணிப்பு செய்யும் வக்கீல் சங்கங்களின் முடிவு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இது சட்ட மீறல். இந்த நடவடிக்கை மேற்கொண்ட மூன்று சங்கங்களின் நிர்வாகிகள் மீது ஏன் கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது. இந்த சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய ஏன் பரிந்துரைக்க கூடாது, என்பதற்கான விளக்கத்தை, 7 நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!