Load Image
Advertisement

கேட்பது, 2.10 லட்சம்... கிடைப்பதோ, 1.10 லட்சம் லி., குடிநீர் பிரச்னை; முற்றுகையிட்டு மக்கள் ஆவேசம்

 Asking, 2.10 lakh... or getting, 1.10 lakh litres, drinking water problem; The siege and the peoples frenzy    கேட்பது, 2.10 லட்சம்... கிடைப்பதோ, 1.10 லட்சம் லி., குடிநீர் பிரச்னை; முற்றுகையிட்டு மக்கள் ஆவேசம்
ADVERTISEMENT
பல்லடம்:பல்லடம் அருகே, நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் மாயமாகி வருவதாக கூறி, பெண்கள், பொதுமக்கள் குடத்துடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுக்கம்பாளையம் ஊராட்சியில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பில்லுார், 2ம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் சப்ளையாகிறது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் கிடைப்பதில்லை என்றும், முறைகேடு நடந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், காலி குடங்களுடன் பெண்கள், சுக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற பல்லடம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், 'அக்., 2 கிராம சபா கூட்டத்துக்குள், குடிநீர் வினியோகத்தை சீர்படுத்த வேண்டும். இல்லாவிடில், போராட்டம் தொடரும்,' என்று கூறி கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

சுக்கம்பாளையம் ஊராட்சிக்கு, தினமும், 2.10 லட்சம் லிட்டர் குடிநீர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், 1.10 லட்சம் லிட் டர் குடிநீர் மட்டுமே வருவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தில் கேட்டால், குறைவான அளவு குடிநீரே கிடைப்பதாகவும், அதன் காரணமாகவே தண்ணீரின் அளவு குறைவதாகவும் கூறுகின்றனர்.

பில்லுார் குடிநீர் வினியோகிக்கப்படும் பிரதான இடத்துக்கே சென்று மீட்டரை பார்வையிட்டதில், 2.10 லட்சம் லிட்டர் பதிவாகி உள்ளது. ஆனால், அங்கிருந்து ஊராட்சிக்கு வந்த பின் நீரின் அளவு குறைகிறது.

எனில், மாயமான குடிநீர் முறைகேடாக வேறு எங்கோ செல்கிறது. குடிநீர் வினியோகத்தில் ஊழல் முறைகேடு நடந்து வருகிறது. இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement