Load Image
Advertisement

மக்களின் ஆதரவுடன் பரந்துார் விமான நிலையம் அமையும்!

  Paranthur airport will be built with the support of the people!     மக்களின் ஆதரவுடன் பரந்துார் விமான நிலையம் அமையும்!
ADVERTISEMENT
சென்னை:''மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிச்சயமாக, பரந்துார் விமான நிலையம் அமைக்கப்படும்,'' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில், 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், கருணாநிதி நுாற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, 'நிறுவனங்களின் நாயகர் - கலைஞர்' புகைப்பட மாடம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதை அமைச்சர் ராஜா, அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று திறந்து வைத்தனர்.

பின், ராஜா அளித்த பேட்டி:

கருணாநிதி முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பின், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி திட்டங்களை வடிவமைத்து, 1971ல், 'சிப்காட்' நிறுவனத்தை துவக்கினார். இன்று, 16 மாவட்டங்களில், 28 தொழில் வளாகங்கள், ஆறு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என, 38,538 ஏக்கரில் வளர்ந்து நிற்கிறது.

அவற்றில் பல்வேறு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் உள்ளன. இதனால், 7.50 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அனைத்து சிப்காட் பூங்காவிலும், கருணா நிதி புகைப்பட கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில், இதுவரை தமிழகம் காணாத வகையில், உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த உள்ளோம். இந்த மாநாடு வெறும் பொருளாதாரத்தை குறித்து மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் அறிவுசார் வளர்ச்சியையும் நோக்கி இருக்கும். இதுவே, முதல்வரின் கட்டளை.

அடுத்தாண்டு ஜன., 7, 8ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், நிச்சயமாக காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் விமான நிலையம் அமைக்கும் பணி சிறப்பாக நடக்கும்; மக்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (1)

  • R Kay - Chennai,இந்தியா

    சென்னையிலிருந்து பரந்தூர் செல்ல இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும். விமான பயண டிக்கெட்டைவிட டாக்ஸிக்கு கொடுக்கும் தொகை அதிகமாய் இருக்கும். வேலைக்கு உதவாத திட்டம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement