பல்லடம், 4 பேர் படுகொலை: 23ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
திருப்பூர்:சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில், திருப்பூர் வீரபாண்டி பிரிவில் 23ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
பல்லடம் பகுதியில், மது குடிப்பதை தட்டிக்கேட்டதற்காக, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது, தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மின்கட்டண உயர்வாலும், 'பீக் ஹவர்' மின் கட்டண முறையாலும், சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை மையப்படுத்தி, அ.தி.மு.க., சார்பில், 23ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'மக்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி எல்லையான, வீரபாண்டி பிரிவில்,23ம் தேதி காலை, 10:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது,' என்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!