Load Image
Advertisement

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பம் மறு பதிவு துவக்கம்

திருப்பூர்;மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதோர், மின்னாளுமை முகமை அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்களை அணுகி, மறு பதிவு செய்யலாம்.

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும், மகளிர் உரிமை திட்டம், தமிழகம் முழுவதும் கடந்த 15ம் தேதி முதல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோர் மேல்முறையீடு செய்ய, 30 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்களில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நேற்று முதல், நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், மகளிர் உரிமை தொகைக்காக, 5 லட்சத்து 687 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், 2 லட்சத்து 36 ஆயிரம் விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்டன. இதனால், உரிமை தொகை கிடைக்காதோருக்காக உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் ஆகியவற்றில், நேற்று முதல் உதவி மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. தங்களுக்கு உரிமை தொகை வரவில்லை என என அறிந்து கொள்ள பெண்கள் ஏராளமானோர், மையங்களை நாடி வருகின்றனர். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு, நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படுகிறது.

இதுதவிர, kmut.tn.gov.in என்கிற போர்ட்டலில் சென்று, ஆதார் மற்றும் ஒ.டி.பி., விவரங்களை வழங்கி, நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.



பணம் கேட்டால் புகார் சொல்லுங்க!

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, உரிமை தொகை கிடைக்காதோரை வலை விரித்து காசு பார்க்க, சில போலி இ-சேவை மையங்கள் முயற்சிக்கின்றன. திருப்பூர், அவிநாசி, பல்லடத்தில், சில கடைகளில், விண்ணப்பம் பதிவு செய்து தரப்படும் என, விளம்பரப்படுத்தி வருகின்றன. மறுபதிவு செய்வதற்கான வசதிகள், மாவட்டம் தோறும் மின்னாளுமை முகமையின் அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், அங்கீகாரம் பெற்ற 1288 இ-சேவை மையங்கள் உள்ளன.பொதுமக்கள், இந்த இ-சேவை மையங்களை அணுகி, மறுபதிவு செய்யலாம். இந்த சேவை முற்றிலும் இலவசம். இதற்காக, எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. விதிமீறி, கட்டணம் வசூலித்தால், 1100 என்கிற எண்ணில் அழைத்து புகார் தெரிவித்தால், இ-சேவை மையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும், என்கின்றனர், மின்னாளுமை முகமை பிரிவினர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement