விபத்தில் ஒருவர் பலி
திருப்பூர்;காங்கயம், களிமேடு பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் பூபதி, 30. இவர் காங்கயத்தில் பயணிகள் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு சவாரி முடித்து விட்டு, பூபதிதன் நண்பர் ஒருவருடன், கோவை ரோட்டில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அதேநேரம், பல்லடத்திலிருந்து சரக்கு வேன் ஒன்று கரூர் நோக்கி வந்தது. அதனை டிரைவர் பிரசாந்த்,30, ஓட்டி வந்தார். காங்கயம்- கோவை ரோடு பெட்ரோல் பங்க் அருகே இந்த இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த ஆட்டோ டிரைவர் பூபதி அதேயிடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோவின் பின்னால் அமர்ந்திருந்த ராஜேந்திரன், 48 பலத்த காயமடைந்தார்.
அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!