Load Image
Advertisement

நகை, பணம் திருட்டு ஆசாமி சிறையில் அடைப்பு

திருப்பூர்;முத்துாரில், வீட்டின் பூட்டு உடைத்து 24 பவுன் நகை, 25 ஆயிரம் ரூபாய், திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வெள்ளகோவில் அருகே முத்துார், காங்கயம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் யசோதா, 72. வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 10ம் தேதி மாலை தனது மகள் வீட்டுக்கு அய்யம்பாளையம் சென்றார்.

மீண்டும், 11ம் தேதி காலை வீடு திரும்பி வந்த பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைத்து, அதிலிருந்த 24 பவுன் நகை, 25 ஆயிரம் ரூபாய் ஆகியன திருடப்பட்டது தெரிந்தது.

இது குறித்து வெள்ளக்கோவில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் இதில், ஈடுபட்டது தெரிந்தது.

பல்வேறு பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. அதனடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட, மயிலாடுதுறை, தாண்டவன்குளம் விஜயசங்கர், 27, என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவர் திருப்பூரில் பொக்லைன் வாகன டிரைவராக வேலை செய்து வந்தார். அவரிடமிருந்து 24 சவரன் நகைகளை பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement