Load Image
Advertisement

மனமகிழ் மன்றம் முற்றுகை; கிராம மக்கள் ஆவேசம்

 Siege of Manajoy Forum; The villagers are obsessed    மனமகிழ் மன்றம் முற்றுகை; கிராம மக்கள் ஆவேசம்
ADVERTISEMENT
அவிநாசி;அவிநாசி அருகே திறக்கப்பட்ட மனமகிழ் மன்றத்தை மூட வலியுறுத்தி, பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அவிநாசி அருகே சேவூர் ஊராட்சி, பந்தம்பாளையத்தில், க.ச. எண் 63/2ஏல் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான இடத்தில், 'ஈரோடு சன் கல்ச்சுரல் ரிக்ரியேசன் கிளப்'என்ற பெயரில் மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து வேட்டுவபாளை யம், சேவூர், முறியாண்டம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், 200க்கும் மேற்பட்டோர், மனமகிழ் மன்றத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சு நடத்தியும் மக்கள் கலைந்து செல்லவில்லை.

கிராம மக்கள் கூறியதாவது:

ஐநுாறுக்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இரண்டு தனியார் பள்ளிகளும், ஒரு அரசு பள்ளியும் அருகில் உள்ளது. பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கு இந்த மன்றம் இடையூறாக இருக்கும்.

மே 1 மற்றும் ஆக., 15ல் நடந்த சேவூர், வேட்டுவபாளையம், முறியாண்டாம்பாளையம் ஊராட்சி கிராம சபா கூட்டத்தில், பந்தம்பாளையத்தில் மனமகிழ் மன்றம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். ஆனால், அதனையும் மீறி, மன்றம் திறக்கப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்து மனமகிழ் மன்றத்தை மூட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீடித்த முற்றுகை போராட்டத்தை அறிந்து, அவிநாசி தாசில்தார் மோகனன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், ஒரு வார அவகாசத்தில் நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார். இதனால், பொதுமக்கள் கலைத்து சென்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement