மாநாட்டிற்கு ஆள்பிடிக்க ம.தி.மு.க., நிர்வாகி டெக்னிக்
மதுரையில் கடந்த வாரம் நடந்த ம.தி.மு.க., மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினர் பங்கேற்றனர். சிதம்பரத்தில் இருந்து பஸ் ஏற்பாடு செய்து, கட்சியினரை அழைத்துவர மேலிடம் உத்தரவிட்டது.
ஆனால், மாநாட்டிற்கு வர கட்சியினர் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. ஏற்பாடு செய்த முக்கிய நிர்வாகி ஒருவர், எவ்வளவோ போராடி பார்த்தார். ஒரு கட்டத்தில் புது டெக்னிக்கை பயன்படுத்த தொடங்கினார். ' வாங்க வாங்க மீனாட்சியம்மன் கோவிலை பார்த்துட்டு வரலாம்' என, ஆசை வார்த்தை கூறி, ஆள் சேர்த்தார்.
இதனால், அவர் எதிர்பார்த்த அளவில் கூட்டம் வரவில்லை என்றாலும், குறிப்பிட்ட அளவில் மாநாட்டிற்கு அவரால் ஆட்களை கொண்டு செல்ல முடிந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!