Load Image
Advertisement

சில்லரை வணிக கடன்களால் வங்கிகளுக்கு ஆபத்து இல்லை

 Banks dont risk retail loans   சில்லரை வணிக கடன்களால் வங்கிகளுக்கு ஆபத்து இல்லை
ADVERTISEMENT
புதுடில்லி: 'சில்லரை வணிகத்துக்கு கடன் வழங்குவது சற்று குறைந்திருந்தாலும், வங்கிகளுக்கு பெரிய ஆபத்து இல்லை' என, 'இக்ரா' எனப்படும் முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் அனில் குப்தா நேற்று கூறியதாவது: கடந்த 2022 - 2023ம் நிதியாண்டில் சில்லரை வணிகத்துக்கான கடன், 18.2 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டில், 16.5 - 18 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகளின் கடன் வளர்ச்சி, சில்லரை வணிகத்தால் இயக்கப்படுகிறது. வங்கி கடன்களில், சில்லரை வணிகத்தின் பங்கு, 2013ல், 18 சதவீதமாக இருந்தது. தற்போது இது, 32 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பாதுகாப்பற்ற கடன்களின் பங்கும், சில்லரை வணிகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும் இவற்றை நிர்வகிக்கும் திறன், வங்கிகளுக்கு உள்ளது. எனவே, சில்லரை வணிகத்துக்கான கடன் சற்று குறைந்திருந்தாலும் வங்கிகளுக்கு பெரிய ஆபத்து இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement