Load Image
Advertisement

சாலை விபத்தில் முதியவர் பலி



திட்டக்குடி : திட்டக்குடி அருகே டாடா ஏஸ் வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தார்.

திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமர், 74; இவர் நேற்று முன்தினம் இரவு இடைச்செருவாய் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக திட்டக்குடி நோக்கி சென்ற டாடா ஏஸ் வாகனம், முதியவர் ராமர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமர் அதே இடத்தில் உயிரிழந்தார்.

திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement