ADVERTISEMENT
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில், உலக புகழ்பெற்ற வனச் சுற்றுலா மையம் உள்ளது. சதுப்பு நிலக்காடுகளுடன் கூடிய இயற்கை சூழலுடன், மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை என்னும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால்,உலக அளவில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாபயணிகள் வருகின்றனர்.
இங்கு, குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். தினசரி அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தாலும், விடுமுறை தினங்கள், கோடை காலங்களில் ஆயிரக்கணக்கில்சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் வனக்காடுகளை சுற்றி பார்க்க வசதியாக, தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சி கழகம் சார்பில், இயந்திர படகுகள், துடுப்பு படகுகள் மற்றும் பிச்சாவரம் சூழல் சுற்றுலா மேலாண்மை குழு மூலம் படகுகள் இயக்கப்படுகிறது.
இதன் மூலம் அரசுக்கும் கனிசமான வருவாய் கிடைக்கிறது.
இந்நிலையில், பிச்சாவரம் சுற்றுலா வருபவர்கள், அங்கு வனக்காடுகளுக்கு மத்தியில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்த காட்டேஜில் (தங்கும் விடுதிகள்) தங்கி செல்வர். ஆனால், காட்டேஜ் பழுதடைந்ததால், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்து மூடப்பட்டது. இதனால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துவருகின்றனர். வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், சுற்றுலாத்துறை காட்டேஜ் கட்டி சுற்றுலா பயணிகள்தங்குவதற்கான வசதிகளை செய்திருந்த நிலையில், சேதமடைந்த காட்டேஜை அகற்றிவிட்டு, புதியதாக கட்ட, சுற்றுலாத்துறைக்கு, வனத்துறை அனுமதி தரவில்லை.
ஆரம்பத்தில் இருந்தே காட்டேஜ் தொடர்பாக, வனத்துறைக்கும் சுற்றுலாத்துறைக்கும் இடையே மோதல் இருந்து வரும் நிலையில், அதே நிலை நீடிப்பதால், இதுவரைகாட்டேஜ் கட்டுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.இதனால், காட்டேஜில்வந்து தங்கி ஓய்வு எடுக்கலாம் என்று ஆர்வத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
தற்போது, பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்த, நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்துவரும் நிலையில், காட்டேஜ் அமைத்து கொடுக்க வேண்டும்.
சுற்றுலா பயணிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!