Load Image
Advertisement

மகளிர் மசோதா: நிர்மலா - கார்கே காரசார மோதல்

 Womens Bill: Nirmala-Gharke political clash     மகளிர் மசோதா: நிர்மலா - கார்கே காரசார மோதல்
ADVERTISEMENT
புதுடில்லி :மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே நேற்று மோதல் ஏற்பட்டதால், புதிய பார்லிமென்ட் செயல்பட துவங்கிய முதல் நாளே பரபரப்பு ஏற்பட்டது. புதிய பார்லி.,யில் நேற்று நடந்த சிறப்பு கூட்டத்தொடரின் முதல்நாளில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த விவாதம் நடந்தது.
அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
''இதனால், பலவீனமான பெண்களையே அரசியல் கட்சிகள் தேர்வு செய்கின்றன. கல்வியறிவு பெற்றவர்கள், எதிர்த்து போராடக்கூடியவர்களை எந்த கட்சியும் தேர்வு செய்வது இல்லை,” என்றார்.
அதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாங்கள் எதிர்க்கட்சி தலைவரை மதிக்கிறோம். ஆனால், அனைத்துக் கட்சிகளுமே திறமையற்ற பெண்களையே தேர்வு செய்கின்றன என அவர் கூறுவதை ஏற்க முடியாது. நாங்கள் அனைவரும், பா.ஜ.,வால், பிரதமரால் அதிகாரம் பெற்றுள்ளோம்.

''ஜனாதிபதி திரவுபதி முர்முவும் அதிகாரம் பெற்ற பெண். பா.ஜ., பெண் எம்.பி.,க்கள் அனைவரும் அதிகாரம் பெற்றவர்கள் தான். கார்கேவின் கருத்து, பெண்கள் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுமானால் பொருந்தலாம். அதற்காக அனைத்து கட்சிகளையும் பொதுவாக குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது,” என, கூறினார்.

அப்போது, “அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கிடைத்த வாய்ப்புகள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கிடைப்பதில்லை,” என, கார்கே கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நிர்மலா சீதாராமன், “ஜனாதிபதி யார்-? எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு மக்களை அவமானப்படுத்துவதை என்னால் ஏற்க முடியாது. பெண்கள் இடையே வேறுபடுத்தி பார்க்கக்கூடாது,” என்றார்.
முன்னதாக, ஜி.எஸ்.டி., தொடர்பான விவாதத்திலும் இரு தலைவர்களும் காரசாரமாக மோதிக் கொண்டனர். சபை அலுவல்களின் முடிவில், இருவரும் தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக தரும்படி ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.


வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement