ADVERTISEMENT
புதுடில்லி: கேபிள் இல்லாமல் இணைய சேவை வழங்கும், 'ஜியோ ஏர் பைபர்' திட்டத்தை, நாட்டின் எட்டு மெட்ரோ நகரங்களில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியது.
உலகப் பணக்காரர்களில் ஒருவரான, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சமீபத்தில் நடந்த அதன் ஆண்டு பொதுக்கூட்டத்தில், ஜியோ ஏர் பைபர் திட்டம் குறித்து அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று, இத்திட்டத்தை சென்னை, மும்பை உள்ளிட்ட எட்டு மெட்ரோ நகரங்களில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கேபிள் இல்லாமல் அதி வேகத்தில் இணைய சேவை வழங்கும் ஜியோ ஏர் பைபர் திட்டம், சென்னை, ஆமதாபாத், பெங்களூரு, புதுடில்லி, ஹைதராபாத், கோல்கட்டா, மும்பை, புனே ஆகிய எட்டு மெட்ரோ நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுவரை எந்த நிறுவனமும் வழங்காத அளவுக்கு அதி வேக இணைய சேவையை, ஜியோ ஏர் பைபர் வழங்கும். இதன் வாயிலாக, பயனர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவம் கிடைக்கும்.
ஏற்கனவே, ஜியோ பைபர் வாயிலாக 1 கோடி வீடுகளில் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதில் கேபிள்கள் பயன்படுத்தப்படுவதால், ஒருசில பயனர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஜியோ ஏர் பைபர் திட்டத்தில், இந்த சிக்கல்கள் ஏற்படாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!