10ம் வகுப்பு - பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்று வேண்டுமா?
திருப்பூர்:தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், தொழிற் பயிற்சி முடித்த, திறன் பெற்ற பயிற்சியாளர்கள், மேற்படிப்பு தொடர்வதற்காக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான வழிகாட்டுதல்கள், www.skilltraining.tn.gov.in என்கிற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தொழிற் பயிற்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் நடத்தப்பட்ட, மொழித்தேர்வில், தனித்தேர்வர்களாக பங்கேற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். இணைய தளத்திலிருந்து விண்ணப்பங்களை பெற்று, திருப்பூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ, வரும் அக்., 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!