ADVERTISEMENT
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி-சரவணா நகர் இணைப்பு சாலையில் கடந்த ஒருமாதமாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகின்றது.இந்நிலையில், இப்பணி மேற்கொள்ளப்படும் இடத்தில் மின் கம்பங்கள் செல்கிறது. ஆனால், இந்த மின் கம்பங்களை அகற்றாமல், வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கடலுாரில் ஏற்கனவே, பழைய கலெக்டர் அலுவலக வாயிலை அடைத்தும், செம்மண்டலம் வேலை வாய்ப்பு அலுவலக வாயிலை அடைத்தும் ஏற்கனவே வடிகால் கட்டப்பட்டது. கோண்டூரில் குடிநீர் குழாய் அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டது என, அவலம் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது, மின்கம்பத்தை நடுவில் வைத்து, வடிகால் வாய்க்கால் அமைக்கும் மாநகராட்சியின் செயல்பாடு, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, வடிகால் வாய்க்காலில் உள்ள மின் கம்பங்களை அகற்றி மாற்று இடத்தில் வைத்துவிட்டு பணியை மேற்கொள்ள கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!