பைக் ஓட்டும் சிறுவர்கள்; மந்தாரக்குப்பத்தில் அதிகரிப்பு
கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதியில் 18 வயதிற்கு கீழே உள்ள மாணவர்கள் சாலையில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது தற்போது அதிகரித்து உள்ளது.
மேலும் பள்ளி மாணவர்கள் விலை உயர்ந்த மோட்டார் வாகனங்களை அதிக வேகத்தில் இயக்குவது, அதிக ஒலி சத்தத்துடன் வாகனங்களில் செல்வது அதிகரித்து கொண்டு வருகிறது.மேலும் பெற்றோர்கள் சிறுவர்களுக்கு சாலை விழிப்புணர்வு குறித்தும், லைசென்ஸ் இல்லாமால் வாகனங்கள் ஓட்டக்கூடாது என அறிவுரை வழங்க வேண்டும். இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!