Load Image
Advertisement

பள்ளி அருகே துர்நாற்றம் வீசுது... மின் கம்பத்தால் ஆபத்து காத்திருக்குது!

 A bad smell is blowing near the school... there is danger due to the electric pole!    பள்ளி அருகே துர்நாற்றம் வீசுது... மின் கம்பத்தால் ஆபத்து காத்திருக்குது!
ADVERTISEMENT
குழியை மூட வேண்டும்

திருப்பூர், அனுப்பர்பாளையம், திலகர் நகர், 5வது வீதியில் குழாய் உடைப்பை சரிசெய்ய தோண்டிய குழி, இன்னமும் மூடவில்லை. இதனால், மக்கள் சிரமப்படுகின்றனர்.

- வரதராஜ், திலகர்நகர். (படம் உண்டு)

குப்பை அள்ளுங்க...

திருப்பூர் ெஷரீப் காலனி, குங்கும விநாயகர் கோவில் வீதியில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். தொட்டி அருகிலேயே குப்பை கொட்டப்படுகிறது.

- சிவசுப்ரமணி, ெஷரீப்காலனி. (படம் உண்டு)

கழிவுநீரால் அவதி

திருப்பூர், மங்கலம், அமிர்தா பள்ளி நுழைவு வாயில் அருகே கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சக்தி, மங்கலம். (படம் உண்டு)

பேரூராட்சி கவனத்துக்கு...

ஊத்துக்குளி ஆர்.எஸ்., சர்ச் அருகே கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுவர் பணி தரமில்லாததால், இப்போதே விரிசல் ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

- ஜெயராஜ், ஊத்துக்குளி. (படம் உண்டு)

மின்கம்பத்தால் ஆபத்து

திருப்பூர், முதல் வார்டு செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் வீதியில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து, கம்பி வெளியே தெரியும் வகையில், விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. கம்பத்தை மாற்ற வேண்டும்.

- நித்யா, செட்டிபாளையம். (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

திருப்பூர், அரிசிகடை வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆறாக சாலையில் ஓடுகிறது. பாதசாரிகள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். கால்வாய் அடைப்பை சுத்தம் செய்ய வேண்டும்.

- மூர்த்தி, அரிசிக்கடை வீதி. (படம் உண்டு)

நடக்க வழியில்லை

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, 2வது ரயில்வே கேட் ஸ்டாப் அருகே சாலையின் ஒரத்தில் உள்ள மணல் திட்டுக்கள் உள்ளது. சாலை குறுகலாகி, கனரக வாகனம் செல்லும் போது, பாதசாரிகள் நடக்க வழியில்லை.

- ஞானசம்பந்தன், ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், அவிநாசி ரோடு, தண்ணீர் பந்தல் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி கால்வாயில் கலக்கிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- கேசவ், தண்ணீர் பந்தல். (படம் உண்டு)

திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சரிசெய்ய வேண்டும்.

- தீபன்குமார், தென்னம்பாளையம். (படம் உண்டு)

திருப்பூர், எஸ்.பெரியபாளையத்தில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் ஓடுகிறது. குழாய் உடைப்பை சரிசெய்து, தண்ணீரை மிச்சப்படுத்த வேண்டும்.

- சங்கரநாராயணன், எஸ்.பெரியபாளையம். (படம் உண்டு)


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement