ADVERTISEMENT
புவனகிரி : புவனகிரியில் கள்ளச்சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர். 125 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
புவனகிரி ஆனந்த் நகர் பகுதி யில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக புவனகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த விஜயன், 39; என்பவர், வீட்டில் மறைத்து வைத்து சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது.
அதையடுத்து, விஜயனை கைது செய்து, அவர் மீது புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 125 லிட்டர் சாராயம் மற்றும் 45 குவாட்டர் பிராந்தி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!