கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை: புலம்பும் சிதம்பரம் போலீஸ்
போலீஸ் துறையில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்தால் அவர்களை வேறு போலீஸ் நிலையத்திற்கு மாற்றுவது வழக்கம்.
அதேபோல கடந்த காலத்தில் இதற்கு முன்பு இருந்த எஸ்.பி., சக்திகணேசன் மாறுதலாகி செல்லும்போது போட்ட டிரான்ஸ்பர் உத்தரவுபடி இதுவரை விடுவிக்கப்படாமல் போலீஸ் அதிகாரிகள் சிலர் முரண்டு பிடித்து வருகின்றனர்.
குறிப்பாக சிதம்பரம் சப் டிவிஷனில் மட்டும் 26 பேர் பணியிடை மாற்றம் செய்தவர்களில் 12 பேர் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.
சிதம்பரம் டவுன், அண்ணாமலைநகர், குமராட்சி போன்ற போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். போலீசாருக்கு டிரான்ஸ்பர் கிடைத்தும், அதிகாரிகள் விடுவிக்காமல் முரண்டு பிடித்து வருகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட போலீசார் நொந்து நுாடுல்ஸாகி வருகின்றனர். 'கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லையே' என, போலீசார் புலம்பி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!