சமுதாய கூடம் திறப்பு
அனுப்பர்பாளையம்:திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லுார் ஊராட்சி, பொடாரம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 15வது மத்திய நிதி குழு மானிய நிதி, நமக்கு நாமே திட்டம், ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள், உறுப்பினர்கள் நிதியின் கீழ் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,விஜயகுமார், கலந்து கொண்டு, சமுதாய கூடத்தை திறந்து வைத்தார். விழாவில், மாவட்ட கவுன்சிலர்கள் வேல்குமார், கண்ணம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர் ரத்தினம்பாள், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தாமணி, வார்டு உறுப்பினர் மணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!