Load Image
Advertisement

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு... சி.ஐ.டி.யு., சங்கம் கேள்வி?

 What is the election promise... CITU, Sangam question?    தேர்தல் வாக்குறுதி என்னாச்சு... சி.ஐ.டி.யு., சங்கம் கேள்வி?
ADVERTISEMENT
திருப்பூர்:'தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, புதிய ஓய்வூதிய திட்ட ரத்து அறிவிப்பை வெளியிட வேண்டும்,' என, அரசை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., தொழிற்சங்சம் சார்பில், 'பிளக்ஸ்' வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான, 14வது சம்பள ஒப்பந்தம் கடந்த, 2021ல் வகுக்கப்பட்டுள்ளது. 2023 பிறந்து, இன்னமும் மூன்று மாதங்களில் முடிவடைய உள்ளது. ஆனால், அரசு தரப்பில் புதிய (15வது) சம்பள ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை துவங்கப்படவில்லை.

இந்நிலையில், திருப்பூர் அரசு போக்குவரத்து கழக டிப்போ அலுவலகம் முன், தமிழக அரசை வலியுறுத்தி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அதில்,'பணியில் உள்ள தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பலன்கள், ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு, ஒப்பந்த அடிப்படையிலான ஓய்வூதிய உயர்வு, பேருந்து பராமரிப்பு முழு செலவையும் கணக்கிட்டு, வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்க வேண்டுகிறோம். தேர்தல் வாக்குறுதியை கூறியபடி, புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும். 15 வது சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவங்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில், 'புதிய சம்பள ஒப்பந்தம் தாமதமாகி வருகிறது. தொடர் வலியுறுத்தல், இருந்தால் மட்டுமே, அரசு பரிசீலிக்கும் என்பதால், இம்முயற்சி மேற்கொண்டுள்ளோம். புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து, தேர்தல் வாக்குறுதியில் கூறியதை முதல்வர் அறிவிப்பாக வெளியிட வேண்டும்,' என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement