போதைபஸ் டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
கடலுார் : குடிபோதையில் பஸ்சை ஓட்டிவந்த தனியார் பஸ் டிரைவருக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
புதுச்சேரியில் இருந்து நேற்று காலை கடலுார் நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்தது. மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே வந்தபோது, முன்னாள் சென்ற காரை இடிப்பதுபோன்று தனியார் பஸ் சென்றது.
இதனால், அதிர்ச்சியடைந்த காரில் வந்தவர்கள், தனியார் பஸ்சை மடக்கி அங்கிருந்த போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது, போலீசார் விசாரணை நடத்தியபோது, தனியார் பஸ் டிரை வர் சிதம்பரம் அடுத்த கடம்பூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பதும். அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ராமச்சந்திரனுக்கு, போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!