ADVERTISEMENT
கடலுார் : என்.எல்.சி., க்கு நிலம் கொடுத்த குடும்பத்திற்கு குடியிருக்க மாற்று இடம், 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
விருத்தாசலம் அடுத்த மும்முடிசோழகன் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;
மும்முடிசோழகன் கிராமத்தில், 2000 முதல் 2007 வரையில், என்.எல்.சி., சார்பில் நில எடுப்பு செய்த வீட்டுமனைகளுக்கு புதிய சட்டத்தின் படி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
புதிய வீடு கட்டி கொடுத்துவிட்டு, பிறகு வீடு, மனைகளை கையகப்படுத்த வேண்டும். விடுபட்ட மக்களுக்கு கருணைத்தொகை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பஞ்சப்படியாக மாதந்தோறும் 5000 ரூபாய், கல்வி, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
இல்லையெனில் உடன டியாக வீடுமனைகளை எடுத்துக்கொண்டு நிரந்தர வேலை, புதிய சட்டத்தின்படி குடியிருப்புடன் கூடிய மாற்றுமனை வழங்க வேண்டும். 2000ம் ஆண்டு முதல் கூடுதல் இழப்பீட்டுத் தொகை பெறாத விவசாயிகளுக்கு கருணைத்தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
குடும்பத்திற்கு மாற்று மனையாக 10 சென்ட் இடம், 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!