ADVERTISEMENT
நல்லுார் ஒன்றியம். பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை ஊராட்சி, பெ.கொல்லத்தங்குறிச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
கடந்தாண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 15வது மானிய நிதிக்குழு திட்டத்தில் 3 லட்சத்து 30 ரூபாய் மதிப்பில் புதிதாக போர்வெல்லுடன் கூடிய மினி டேங்க் அமைக்கப்பட்டது. ஆனால் மின் இணைப்பு வழங்காமல் இதுநாள் வரை காட்சிப்பொருளாக உள்ளது. அரசு நிதி பாழாவதுடன் கிராம மக்கள் குடிநீர் பெற மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
பெ.கொல்லத்தங்குறிச்சியில் காட்சிப்பொருளான மினிடேங்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!