பார் ஆக மாறிய பள்ளி வளாகம்
புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில், டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் டாஸ்மாக் இயங்குவதுடன், அதன் அருகிலேயே அரசு மாதிரி மகளிர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. மாலை நேரங்களில் மது பிரியர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து ஹாயாக சரக்கு அடிக்கின்றனர்.
அங்கேயே பாட்டில்கள் மட்டும், மது அருந்தும் பிளாஸ்டிக் கப் ஆகியவற்றை வீசி செல்கின்றனர். இதனால், தினமும் காலையில் பள்ளிக்கு வரும் மாணவிகள் முகம் சுளிக்கின்றனர். எனவே, கடையை மாற்றக்கோரி, பல அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
பொருத்தது போதும் என, பொங்கி எழுந்த அப்பகுதி மக்கள், புதிய கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
இதனால், கடையை உடனடியாக மாற்ற, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆனாலும், இதுவரை கடை அங்கிருந்த மாற்றப்படவில்லை.
வேறு இடம் கிடைக்கவில்லை என, டாஸ்மாக் அதிகாரிகள் நொண்டி சாக்கு கூறி காலம் கடத்தி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!