Load Image
Advertisement

விதி மீறினால் உணவகம் மூடப்படும்! சவர்மா தயாரிப்பாளருக்கு எச்சரிக்கை

 If the rules are violated, the restaurant will be closed! Warning to the maker of Sawarma    விதி மீறினால் உணவகம் மூடப்படும்! சவர்மா தயாரிப்பாளருக்கு எச்சரிக்கை
ADVERTISEMENT
திருப்பூர்:சவர்மா' தயாரிப்பாளர்கள் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், முன்னறிவிப்பு இன்றி உணவகம் மூடப்படும் என, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில், ஓட்டலில் சவர்மா வாங்கி சாப்பிட்ட சிறுமி பலியாகியுள்ளார். இதனால், தமிழகம் முழுவதும் அனைத்து அசைவ ஓட்டல்களிலும் ஆய்வு மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், அதிகாரிகள் குழுவினர், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்டம் முழுவதும் 43 அசைவ ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், சுகாதாரமற்ற கெட்டுப்போன கோழி இறைச்சி 16 கிலோ; கெட்டுப்போன மீன் 3.5 கிலோ; காலாவதியான 750 கிராம் மயோனைஸ்; 50 கிராம் செயற்கை நிறமி பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன உணவு ரகங்களை விற்பனைக்கு வைத்திருந்த, 5 ஓட்டல், தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்த ஒரு ஓட்டல் என, ஆறு ஓட்டல்களுக்கு, மொத்தம் 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் சவர்மா தயாரிப்பாளர்கள், உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் பெற்றவர்களிடமிருந்து மட்டுமே, சவர்மாவுக்கான கோழி இறைச்சி உள்ளிட்ட மூலப்பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

சிக்கன் மற்றும் மசாலா கலக்கும்போது கையுறை அணிந்திருக்கவேண்டும். உணவகத்தின் வெளியே துாசு படியும் இடங்களில் சவர்மா அடுப்பு வைத்திருக்க கூடாது. நன்கு வேக வைத்த பின்னரே தான் விற்பனை செய்ய வேண்டும்.

சவர்மா அடுப்பு தொடர்ந்து இயங்க வேண்டும். அடுப்பில் வைத்து வேகவைத்த 2 மணி நேரத்துக்குள் பரிமாறிவிட வேண்டும். குறைந்தபட்சம் 70 டிகிரி செல்சியசில் வேக வைக்க வேண்டும்.

விதிமுறைகளை பின்பற்றாமல் சவர்மா தயாரித்து விற்பனை செய்தால், அந்த உணவு நிறுவனம் எவ்வித முன்னறிவிப்புமின்றி மூடப்படும். உணவு சம்பந்தமான புகார்களை, 94440 42322 என்கிற 'வாட்ஸ்அப்' எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.


வாசகர் கருத்து (2)

  • சண்முகம் -

    சுவர்மா குறைந்த சூட்டில் மெதுவாக சமைக்கப்பட்டு பல நாட்களுக்கு குறைந்த சூட்டிலேயே சுற்றிக்கொண்டு இருப்பதால் இ-கோலை என்ற உயிர்க்கொல்லி கிருமி உண்டாக நிறைய வாய்ப்புகள் உண்டு. சுவர்மாவை சாப்பிடாதிருத்தலே உடலுக்கு நன்று.

  • அப்புசாமி -

    உணவகத்தை மூடினால் திருட்டு திராவிடனுங்க அடுத்த சந்தில் கடையை திறந்துடுவாங்க. தூக்க் தண்டனைன்னு சொல்லி நிறைவேத்துங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement