உதவி மையம்; கமிஷனர் ஆய்வு
திருப்பூர்:மகளிர் உரிமை திட்ட விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில், மாநகராட்சி சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தகுதியான குடும்ப தலைவியருக்கு மாதாந்திர உரிமை தொகை அறிவித்து வழங்கியுள்ளது. இதற்காக விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கு இத்தொகை வரவில்லை.
இந்நிலையில், உரிமைத் தொகை கிடைக்க பெறாதவர்களுக்கு, இது குறித்து விவரம் தெரிவிக்கும் வகையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் திருப்பூர் மாநகராட்சி 3 மற்றும் 4 ஆகிய மண்டல அலுவலகங்களில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று இதன் செயல்பாட்டை மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். உதவி கமிஷனர் வினோத் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!