ஒருவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த டி.கே.மண்டபத்தைச் சேர்ந்தவர் முத்து, 50; இவர், கனகனந்தல் ரோட்டில் உள்ள பெட்டி கடைக்கு தண்ணீர் பாட்டில் வாங்க சென்றார். அவரை, கடையிலிருந்து வெளியில் வந்த கனகனந்தல் குப்புசாமி மகன் பாஸ்கர், 23; இடித்து விட்டார்.
இதை கேட்டதால் ஆத்திரமடைந்த பாஸ்கர், அவரது ஆதரவாளர்கள் ரஞ்சித், 28; தங்கதுரை, 29; ஆகியோர் முத்துவை தாக்கினர். தடுத்த அவரது உறவினர்கள் விஜய், சூர்யா ஆகியோரையும் தாக்கினர். புகாரின் பேரில் பாஸ்கர் உட்பட மூவர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!