ADVERTISEMENT
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் சென்றனர்.
கச்சிராயபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, 50க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு மூன்று நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்த பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கோமுகி அணையில் கரைக்கப்படுவது வழக்கம்.
மேலும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளும் கோமுகி அணைக்கு ஊர்வலமாக எடுத்து வந்து கரைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோமுகி அணையில் சிலை கரைக்கும் இடங்களை வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சிலை கரைப்பதற்கான ஆயத்தப் பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் முக்கிய சாலைகள் வழியாக அணிவகுப்பு ஊர்வலம் சென்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!