இன்று விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்
திண்டிவனம் : திண்டிவனம் சப்கலெக்டர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடக்கின்றது.
திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையிலுள்ள சப்கலெக்டர் அலுவலகத்தில், இன்று (20ம் தேதி) காலை 11 மணிக்கு, சப்கலெக்டர் கட்டா ரவி தேஜா தலைமையில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடக்கின்றது.
இதில், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனுார் வட்டங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு, குறைகளை தெரிவித்து பயன் பெற வேண்டும் என்று சப்கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!