Load Image
Advertisement

பனியன் வர்த்தக மோசடியை தடுக்க உற்பத்தியாளர் :- வர்த்தகர் கூட்டுக்குழு  தீபாவளி ஆர்டர்களில் கவனம் தேவை

திருப்பூர்:பனியன் வர்த்தகத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், தீபாவளி ஆர்டர்களை கவனமாக கையாள வேண்டுமென, 'அட்ஷ்ரா' குழு அறிவுறுத்தியுள்ளது. திருப்பூரின் பாரம்பரிய தொழிலாக மாறியுள்ள பனியன் தொழில், இன்றைய காலகட்டத்தில் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறது. கடும் சவால்களையும் தாண்டி, பின்னலாடை மற்றும் உள்ளாடைகள் உற்பத்தி நடந்து வருகிறது. பலகட்ட சோதனைகளை கடக்கும் உற்பத்தியாளர்களை, நுாதன முறையில் ஏமாற்றி, மோசடி செய்யும் கும்பலின் ஆட்டம் அதிகரித்துள்ளது.
வெளிமாவட்டம் அல்லது வெளிமாநிலங்களை சேர்ந்த நபர்கள், தங்களை வர்த்தகர் என்று கூறி அறிமுகமாகின்றனர். நம்பிக்கைக்கு உரியவர் என்ற தோற்றத்தை உருவாக்கிய பின், சில நாட்கள், கடனுக்கு சரக்கு பெற்று, ஒழுங்காக பணத்தை கொடுக்கின்றனர்.

அதன்பின், அதிக ஆர்டர் கொடுத்து ஆடைகளை வாங்கி கொண்டு 'எஸ்கேப்' ஆகின்றனர். ஆடைகளை, தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் விற்றுவிடுகின்றனர். சிறு வியாபாாரிகளும், 20 சதவீதம் வரை விலை குறைவாக கிடைப்பதால், ஆடைகளை வாங்கி விற்பனை செய்துவிடுகின்றனர்.

கடைசியில், ஆடை உற்பத்தி செய்து கொடுத்த திருப்பூர் உற்பத்தியாளர், போலீசில் புகார் அளித்து, போராட்டம் நடத்தி, பயனின்றி ஓய்ந்து விடுகின்றனர். இவ்வாறு, சிறு, குறு பனியன் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், தொழில் வழிகாட்டவும் வசதியாக, வர்த்தகர் - உற்பத்தியளர்களில், 'அனைத்து தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் சங்கம் (அட்ஷ்ரா)' என்ற குழுவை உருவாக்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள, விற்பனை பிரதிநிதிகளை, 'வாட்ஸ்ஆப்' மூலம் உறுப்பினராக இணைத்துள்ளனர். ஆர்டர் பெற்று வர்த்தகம் செய்வதை, சட்டரீதியாக சரிபார்க்க துவங்கி விட்டனர்.

தமிழகத்தில் உருவாகியுள்ள, 'அட்ஷ்ரா' குழுவுடன், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநில குழுக்களை ஒருங்கிணைக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். அதற்காக, அந்தந்த மாநில வர்த்தக பிரதிநிதிகள் அடங்கிய குழு உருவாக்கி, சட்டரீதியாக பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.

முதல்கட்டமாக, திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் அடங்கிய 'அட்ஷ்ரா' குழு, கேரளாவில் உள்ள உற்பத்தியாளருக்கு, வர்த்தக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உருவாகியுள்ள, 'அட்ஷ்ரா' குழுவுடன், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநில குழுக்களை ஒருங்கிணைக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்



தீபாவளி ஆர்டர் 'உஷார்'

இதுகுறித்து 'அட்ஷ்ரா' குழு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்,' பின்னலாடை வர்த்தகர்- உற்பத்தியாளர் இணைந்து, குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், யாராவது வர்த்தக விசாரணை நடத்தினால், முதலில் அவர்கள் நம்பிக்கைக்குரிய நபர்களா என்பதை, அந்தந்த ஊரில் உள்ள குழு உறுப்பினர் மூலமாக உறுதி செய்துகொள்கிறோம்.அதன்பின்னரே, வர்த்தக தொடர்பு வைக்கிறோம். தீபாவளி ஆர்டரில் மீண்டும் மோசடி நடந்துவிடக்கூடாது என, எச்சரிக்கையுடன் இருக்கிறோம். தமிழகத்தை தொடர்ந்து, கேரளாவில் குழுவை உருவாக்கியுள்ளோம். வரும் வாரத்தில் இருந்து, ஆர்டர் ஒப்பந்தம் மற்றும் பனியன் வர்த்தகம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement