ஓய்வூதியர் குறைகேட்பு
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் அக்., 12ம் தேதி, காலை, 10:30 மணிக்கு நடைபெற உள்ளது.
அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தங்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதியம், இதர ஓய்வூதிய பலன்கள் கிடைக்க பெறாதபட்சத்தில், அவ்விவரங்களை வரும், 30ம் தேதி மாலைக்குள், கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்கு), நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பிவைக்கவேண்டும்.
மாநகராட்சி, அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஓய்வூதியம் பெறுவோர், இந்த கூட்டத்தில் விண்ணப்பம் அளிக்க கூடாது. ஓய்வூதியர் சங்க பிரதிநிதிகளும், முகாமில் பங்கேற்று, ஓய்வூதியர் பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!