ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. 1,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியொட்டி, 850 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் செய்துள்ளனர்.
விநாயகர் சிலைகள் இன்று 3ம் நாள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் பகுதியில் வைக்கப்பட்டுள்ள 820 சிலைகளின் விஜர்சன ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
சங்கராபுரம் பகுதி சிலைகள் 24ம் தேதியும், மணலுார்பேட்டை பகுதி சிலைகள் 22ம் தேதியும் கரைக்கப்பட உள்ளன. மாவட்டம் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கிடும் வகையில், அரசு சார்பில் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறை நான்கு முனை சந்திப்பில் உள்ள போக்குவரத்து பிரிவு காவல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைக்க அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள அரகண்டநல்லுார் அதுல்யநாதேஸ்வரர் கோவில் தொட்டி, சங்கராபுரம், உளுந்துார்பேட்டை மற்றும் திருநாவலுார் ஏரிகள், கச்சிராயபாளையம் கோமுகி அணை ஆகிய பகுதிகளில் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.
மாவட்டம் முழுதும் விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பிற்காக கள்ளக்குறிச்சி எஸ்.பி., மோகன்ராஜ் தலைமையில், 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 6 டி.எஸ்.பி.,க்கள், 14 இன்ஸ்பெக்டர்கள், 60 எஸ்.ஐ.,க்கள் உட்பட 600 உள்ளூர் போலீசார், 100 ஆயத படை, 100 சிறப்பு படை, 100 ஊர்க்காவல் படை, 100 பறக்கும் படை போலீசார் என, மொத்தம் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!