விநாயகர் சிலை ஊர்வலம்; எஸ்.பி., ஆலோசனை
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளுக்கு கொண்டு செல்லும் ஊர்வலத்திற்கான பாதுகாப்பு குறித்து எஸ்.பி., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தியை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 1,500 பொது இடங்களில் 3 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் இன்று (20ம் தேதி) மதியம் 1.00 மணிக்கு மேல், விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே வாகனங்களில் கொண்டு வரப்பட்டு, இந்து முன்னணி சார்பில் ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்படுகிறது.
ஊர்வலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி.,அலுவலகத்தில் எஸ்.பி., சசாங்சாய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஸ்ரீதர், கோவிந்தராஜ் உட்பட டி.எஸ்.பி.,க்கள் கலந்து கொண்டனர். இதில் ஊர்வலத்திற்கு பாதுகாப்பிற்காக 1,500 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சிலைகள் விஜர்சனம் செய்யும் வீடூர் அணை, அரகண்டநல்லுார் தென்பெண்ணை ஆறு மற்றும் இ.சி.ஆரில் உள்ள எக்கியார்குப்பம், கைப்பானிக்குப்பம், தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையம் ஆகிய கடற்கரை பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அசம்பாவிதம் ஏதும் நேரமால் ஊர்வலம் அமைதியாக நடக்க வேண்டும் என எஸ்.பி., சசாங்சாய், போலீசாருக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!