பெட்ரோல் பங்க் அமைக்க தாட்கோ திட்டத்தில் கடன்
திருப்பூர்;ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு, தாட்கோ திட்டத்தில், குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் கடன் பெற, 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் அனைவரும் விண்ணப்பிக்கலாம். www.petrolpumpdealerchayan.in என்கிற இணையதளத்தில் வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
பெட்ரோல் நிறுவனம் வாயிலாக தேர்வு செய்யப்படும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, முதலில் கொள்முதல் செய்யும் பெட்ரோல், டீசல் (ஒரு டேங்கர்) தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, குறைந்த வட்டியில் தாட்கோ மூலம் கடனாக வழங்கப்படும்.
பாரத் பெட்ரோலியம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்கள், தாட்கோ தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளரை, 73584 - 89990 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
கூடுதல், விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலக ஐந்தாவது தளம், அறை எண்: 501ல் செயல்படும், தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு, 94450 29552, 0421 2971112 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!